நோர்வூட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
நோர்வூட் வெஞ்சர் தோட்டப்பகுதியில் சுமார் 1 கிலோ 50 கிராம் கொண்ட புகையிலைத்தூளுடன் (என்.சி) ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த போதைப் பொருளினை வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த வேளையிலேயே மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் தினங்களில் ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.