Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிக்கடை துப்பாக்கி சூட்டு சம்பவம்: இழப்பீடு பெறுவதற்குத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்!

In இலங்கை
Updated: 11:01 GMT, Nov 10, 2017 | Published: 10:59 GMT, Nov 10, 2017 |
0 Comments
1176
This post was written by : Ravivarman

வெலிக்கடைச் சிறைசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு இதுவரை வழங்கப்படாதிருந்தால் இது தொடர்பாக அறிவிக்குமாறு சிறைச்சாலை மறு சீரமைப்பு மற்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் உயிரிழந்தவர்களுள் 10 பேருக்கும் காயமடைந்த ஐவருக்குமாக நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இறந்த கைதி ஒருவருக்காக 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்த ஒருவருக்கு 5 இலட்ச ரூபாவும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைவாக இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg