Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரிரி வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை – பிரான்ஸ் அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 13:25 GMT, Nov 10, 2017 | Published: 13:25 GMT, Nov 10, 2017 |
0 Comments
1165
This post was written by : Risha
ggggg

லெபனானின் முன்னாள் பிரதமர் சாட் அல்-ஹரிரி சவுதி அரேபியாவில் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என தான் நம்புவதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லே ட்ரையன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனது ராஜினாமாவை விவரித்த சாட் அல்-ஹரிரி, தனது வாழ்க்கை ஆபத்தில் இருப்பது குறித்து ஊடகவியலாளர்கள் பிரான்ஸ் அமைச்சரிடம் வினவியபோது, ”இது தொடர்பில் அவரிடமே வினவ வேண்டும். அவரது சுய விருப்பின் பேரில் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், லெபனானின் ஸ்திரத்தன்மை தொடர்பிலேயே நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். பரிஸானது, லெபனானுடனும், ஹரிரி- உடனும் நெருங்கிய உறவை பேணி வருகிறது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg