Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவில் வழங்கப்படும் ஆவணங்களுக்கான புதிய கட்டணங்கள்

In இலங்கை
Published: 13:27 GMT, Nov 10, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Arul Jesu
download

வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவினால் வழங்கப்படும் ஆவணங்களுக்கு அறிவிடப்படும் புதிய கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏற்றுமதிக்காக வழங்கப்படும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 6000 ரூபாவும், ஏனைய ஆவணங்களை பெற சாதாரணமாக 800 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

மேலும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களை வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 500 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

அத்துடன் இந்த ஆவணங்களை வெளிநாட்டவர் ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 1500 ரூபா செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg