Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையர்கள் 19 பேர் இந்தோனேசியாவில் கைது!

In இலங்கை
Published: 16:32 GMT, Nov 10, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Vithushagan
arr2

விசா நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் பத்தொன்பது பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் போபோ நகரின் கிராமப் புறம் ஒன்றில் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி பத்தொன்பது பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இந்தோனேசியா வந்திருந்தது தெரியவந்துள்ளது.

எனினும், தாம் வதிவிட விசாவிலேயே இந்தோனேசியா வந்திருப்பதாகவும், சட்டத்துக்கு முரணாக எதையும் தாம் செய்துவிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் கடவுச் சீட்டுக்களைப் இந்தோனேசிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg