Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

In சினிமா
Updated: 10:23 GMT, Nov 11, 2017 | Published: 10:23 GMT, Nov 11, 2017 |
0 Comments
1420
This post was written by : Surenth

நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘எம்.ஜி.ஆர்.’ திரைப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த ஆரம்ப நிகழ்வு, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர்.வேணுகோபால் மற்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் முன்னிலையில் இடம்பெற்றது.

‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார்.

இந்த நிலையில், உலகெங்கிலுமுள்ள தமிழர்களை சென்றடையும் வகையில் அனைவரும் உதவி புரிய வேண்டும் என வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg