Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் உருவத்தை வடகொரிய ஜனாதிபதி கேலி செய்தாரா!

In
Published: 05:48 GMT, Nov 12, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Suganthini

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தன்னை வயது முதிந்தவர் என்று கூறி அவமதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை, தான் ஒருபோதும் கட்டையானவர் என்றோ பருமனாவர் என்றோ கூறி அவமதித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள டுவீட்டர் செய்தியிலேயே, இதனைக் கூறியுள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘என்னை வயது முதிந்தவர் என்று கூறி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஏன் இவ்வாறு அவமதித்தார் என்று தெரியவில்லை.  இருந்தபோதிலும், அவரை நான் ஒருபோதும் பருமனாவர் என்றோ அல்லது கட்டையானவர் என்றோ கூறி அவமதிக்கவில்லை’ என்றார்.

மேலும், ‘வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் நண்பராக இருப்பதற்கு நான் கடுமையாக முயற்சிக்கின்றேன் என்பதுடன், எனது முயற்சி ஒரு நாள் பலன் அளிக்கும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg