Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் வல­கம்பா அரசர் கால இரத்தினக்கல் மீட்பு!

In இலங்கை
Published: 17:48 GMT, Nov 13, 2017 |
0 Comments
3601
icon_com
This post was written by : Ravivarman
DSC07270

புத்தளம் மாவட்டம் வன்னியாகம பிரதேசத்தில் புதையல் ஒன்றின் மூலம் பெறப்பட்ட 300 கிராம் எடையுடைய நீல இரத்தினக்கல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னியாகம அரச பாதுகாப்பு வனாந்தரத்தின் பிரதான வீதியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மொரகஹவெவ பகுதியிலேயே குறித்த இரத்தினக்கல் நேற்று கைப்பற்றப்பட்டது.

கற்­பாறை ஒன்றின் நீர் தேங்­கி­யி­ருந்த சிறிய குழி­யி­லி­ருந்த புதை­யலை உடைத்து அதிலிருந்து இந்த நீல இரத்­தினக்கல்லை எடுக்கும்போது அங்கு காத்­தி­ருந்த நவ­கத்­தே­கம பொலிஸார் பிர­தான சந்­தேக நப­ரான மாத்­தறை பிர­தே­சத்தைச் சேர்ந்த 34 வய­து­டைய பூசகர் ஒருவரையும் நவ­கத்­தே­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த மற்­றொ­ரு­வ­ரையும் கைது செய்­துள்­ளனர்.

பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றைத் தொடர்ந்து நவ­கத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் குழு ஒன்று குறித்த பிர­தே­சத்­துக்கு ஏற்­க­னவே சென்று அங்கு புதையல் தோண்­டு­வ­தற்­காக சந்­தேக நபர்கள் வரும்வரையில் காத்­தி­ருந்­தனர்.

சந்­தேக நபர்கள் அங்கு வந்து புதையலைத் தோண்டிக் குறித்த நீல மாணிக்க கல்லை எடுத்­ததன் பின்னர் அவர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறித்த மாணிக்­ககல் சுமார் 300 கோடிக்கும் அதிக பெறு­ம­தி­யா­னது எனவும், அது வல­கம்பா அர­சரின் காலத்தில் இங்கு வைக்­கப்­பட்­டது என்றும் இதன் போது கைது செய்­யப்­பட்ட நபர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

புதையல் தோண்­டு­வ­தற்­காக குறித்த பூசகர் குறு­கிய நேரத்­தையே எடுத்­த­தா­கவும், இரத்­தி­னக்கல் எடுக்­கப்­பட்ட போது பெரும் வெளிச்சம் ஒன்று அந்த குழி­யி­லி­ருந்து பரவிச் சென்­ற­தா­கவும், அந்தக் கல்லை எடுக்கும்போது பெருமழை பெய்­த­தா­கவும் இந்த முற்­று­கையில் கலந்து கொண்ட பொலிஸார் தெரி­வித்­தனர்.

நவ­கத்­தே­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நவீன் இந்­தி­ரஜித் தயா­னந்­த­வினால் இந்த நீல மாணிக்­ககல் ஆன­மடு நீதி­மன்­றத்தில் கைய­ளிக்­க­பட்டபோது அதன் தரத்தை மதிப்­பி­டு­வ­தற்கு தேசிய இரத்­தி­னக்கல் மற்றும் நகை அதி­கார சபைக்கு ஆன­மடு பதில் நீதவான் உத்­த­ரவிட்டார்.

DSC07278 DSC07276 DSC07272

DSC07267

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg