Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாப்பரசர் பிரான்சிஸ் சிலி மற்றும் பெரு செல்கிறார்

In ஐரோப்பா
Published: 11:35 GMT, Nov 14, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Elakkiya

பாப்பரசர் பிரான்ஸிஸ் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் விஜயம் செய்யவுள்ள நகரங்கள் மற்றும் இடங்கள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிலியின் தலைநகர் லிமாவில் நேற்று (திங்கட்கிழமை) மேற்படி அறிவிப்பை வெளியிட்ட சிலியின் தேசிய ஆணையக அதிகாரி, ஜனவரி 16 ஆம் திகதி சிலி வருகைதரும் திருத்தந்தை பிரான்ஸிஸ், சான்டியாகோ, டெமுகோ மற்றும்  Iquique   ஆகிய நகரங்களை பார்வையிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 18 ஆம் திகதி பெருவுக்கு விஜயம் செய்யும் பிரான்சிஸ், தலைநகர் லிமாவில் பல்வேறு இடங்களையும் வடக்கு கரையோர நகரான ட்ருஜிலோ  (Trujillo) மற்றும் பியூர்டோ மால்டனாடோவின் (Puerto Maldonado)  அமேசானிய நகரத்தையும் பார்வையிட்டு ஜனவரி 21 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலி மற்றும் பெருவுக்கான விஜயத்தின் போது இருநாட்டு ஜனாதிபதிகளையும் சந்திக்கும்பிரான்சிஸ் உள்நாட்டு குழுக்களுடன் தனது நேரத்தை செலவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)