Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டைக் கட்லட்

In
Updated: 11:52 GMT, Nov 28, 2017 | Published: 11:50 GMT, Nov 28, 2017 |
0 Comments
1560
icon_com
This post was written by : Vithushagan
featured-img30

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு- 250 கிராம் 
முட்டை- 7
வெங்காயம்- 50 கிராம்
பச்சை மிளகாய் -6
மிளகுத்தூள் – தேவையானளவு
உப்பு- தேவையானளவு
எலுமிச்சைச்சாறு – 1 தேக்கரண்டி
பிஸ்கட்தூள்- தேவையானளவு
எண்ணெய்- தேவையானளவு

செய்முறை:

முட்டைகளை நன்கு அவித்து சரி பாதியாக வெட்டி மஞ்சள்கருவை நீக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கை அவித்து நன்கு மசித்து அதனுடன் மஞ்சள்கரு, சிறிய அளவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், உப்புத்தூள் , எலுமிச்சைச்சாறு கலந்து பிசைந்து கொள்ளவும்.

ஒவ்வொரு முட்டைப் பாதியையும் கிழங்குக்கலவையைச் சேர்த்து பூரணமாக்கி உருண்டைகளாக்கவும்.

அடித்து வைத்த முட்டைக்கலவையில் உருண்டைகளை தோய்த்து பிஸ்கட்தூளில் பிரட்டி கொதிக்க வைத்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

முட்டைக் கட்லட் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg