Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாவே ஜனாதிபதி முகாபே வீட்டுக்காவலில் வைப்பு (2ஆம் இணைப்பு)

In உலகம்
Published: 05:28 GMT, Nov 15, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Suganthini

சிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, ஹரரேயில் ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, தென் ஆபிரிக்க ஜனாதிபதி    ஜகோப் சூமா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனக்கு எந்தவித பிரச்சினையுமின்றி உள்ளதாக தொலைபேசி மூலமான அழைப்பின்போது சிம்பாவே ஜனாதிபதி முகாபே தெரிவித்துள்ளதாக, தென்கொரிய தலைவர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிம்பாவேயில் மோதல்: தேசிய தொலைக்காட்சி நிலையம்  ராணுவத்தினர்  வசம்

சிம்பாவேயின் தலைநகரான ஹரரேயை இன்று (புதன்கிழமை) அதிகாலை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளதுடன், அந்நாட்டு அரசு ஊடகமான zbc  தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ராணுவ புரட்சிக்கான அடித்தளமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஹரரேயில் மோதல் இடம்பெற்றுவருவதுடன், கடுமையாக துப்பாக்கிச்சூடுகள் மற்றும் ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் கேட்டவண்ணமுள்ளதாகவும் ஊடகச்செய்தியொன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவத்தினர், ‘அரசாங்கத்தின் மீது ராணுவ நடவடிக்கையை நாம் முன்னெடுக்கவில்லை என்பதுடன், குற்றவாளிகளை இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்படுகின்றது.

சிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். குற்றவாளிகளைப் பிடித்தவுடன், நிலைமை வழமைக்குத் திரும்பும்’ ‘ எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆளும் கட்சி,  ராணுவத்தினர் தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக  குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், சிம்பாவேயின் ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கைப்பற்றி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள, அதேவேளை இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை அல்ல என இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், நிலைமை மோசமாகக் காணப்படுவதால், சிம்பாவேயிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும்  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில்,  சிம்பாவேயின் துணை ஜனாதிபதியாக இருந்த எம்மெர்சன் மனங்கவ்வா (Emmerson Mnangagwa), நம்பிக்கையான முறையில் தனது கடமையை நிறைவேற்றத்தவறியமை மற்றும் கீழ்ப்படியாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த வாரம் ஜனாதிபதி முகாபேயால் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, சிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயினால் பதவிநீக்கப்பட்ட துணை ஜனாதிபதி எம்மெர்சன் மனங்கவ்வா விற்கு ஆதரவாயுள்ள  இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ள  இந்த  நடவடிக்கையானது  சிம்பாவ்வேயின்  அரசியல் ஸ்திரமின்மையை ஆட்டம் காண வைத்துள்ளது.

சிம்பாவேயில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, நிதி அமைச்சர் இக்னேசியஸ் சோம்போவை ( Ignatius Chombo) ராணுவத்தினர்  கைதுசெய்துள்ளனர்.

zim 2
zim 3
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)