Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகாராணி எலிஸபெத் திருமண பந்தத்தில் இணைந்து 70 ஆண்டுகள் பூர்த்தி

In
Published: 08:03 GMT, Nov 15, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Suganthini

பிரித்தானிய மகாராணி எலிஸபெத், தனது கணவர் பிலிப்புடன் 70ஆவது வருட திருமண வைபவ நாளை கொண்டாடுவதற்குத் தயாராகி வருகின்றார்.

கடற்படை அதிகாரியாகக் கடமையாற்றிவந்த லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டனுடன் 1947ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 20ஆம் திகதி திருமண பந்தத்தில் மகாராணி எலிஸபெத் இணைந்ததுடன், இவர்களின் திருமண வைபவம் உலகம் பூராகவும் கவனத்தையீர்த்தது.

91 வயதான எலிஸபெத் மகாராணியும் அவரது 96 வயதான கணவர் பிலிப்பும் திருமண பந்தத்தில் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்நிலையில், தமது குடும்ப உறுப்பினர்களுடன் மேற்கு லண்டனில் அமைந்துள்ள அரண்மனையில் தமது திருமண வைபவ நாளை இவர்கள் கொண்டாடுவதற்குத் தயாராகி வருகின்றனர்.

இவர்களின் திருமண வைபவ நாள் பொது நிகழ்வாகக் கொண்டாடப்பட மாட்டாதென, பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)