Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாவேயில் அமைதி பேணப்பட வேண்டும் – ஜேர்மன்

In ஐரோப்பா
Published: 12:46 GMT, Nov 15, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Suganthini
ger

சிம்பாவேயில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினர்களும் முன்வர வேண்டுமென, ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது.

பேர்லினில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தற்போது சிம்பாவேயில் குழப்பமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். அங்கு வன்முறைகளைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய பங்காளர்களுடன் இணைந்து நாம்    வலியுறுத்துவதுடன், அங்கு அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.’ என்றார்.

சிம்பாவேயின் தலைநகரான ஹரரேயை இன்று (புதன்கிழமை) அதிகாலை ராணுவத்தினர் சுற்றிவளைத்ததுடன், அந்நாட்டு அரசு ஊடகமான தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg