Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனரக வாகனத்தில் தீ விபத்து: தீயணைப்பு படை வீரர் ஒருவர் காயம்

In கனடா
Published: 11:52 GMT, Nov 17, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy

எட்டோபிக்கோ பகுதியில் கனரக வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை அணைக்கும் முயற்சியின் போது காயமடைந்த தீயணைப்பு படை வீரர் காயமடைந்துள்ளார்.

நெடுஞ்சாலை 27 மற்றும் டிக்சன் வீதிப் பகுதியில், சிற்றி வியூவ் டிரைவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது.

கனரக சரக்கு ஊர்தி ஒன்று தீக்கிரையான நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ரொறன்ரோ தீயணைப்பு படை வீரர் ஒருவர், வீழ்ந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைந்துவிடுவார் என்று நம்புவதாகவும் ரொறன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg