Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த ஆட்சியை மூடீஸ் நம்புகிறது:பிரதமர் தெரிவிப்பு!

In இந்தியா
Updated: 12:32 GMT, Nov 17, 2017 | Published: 12:32 GMT, Nov 17, 2017 |
0 Comments
1277
This post was written by : Kemasiya

தனது ஆட்சியில் வணிகம், உற்பத்தி திறன் வலுப்பெறுவதாக மூடீஸ் (அமெரிக்காவின் சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனம்) நம்புவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

எமது ஆட்சியின் முயற்சியினால், வணிகம் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தி திறன் மேம்படுத்துதோடு, முதலீட்டு தொழிலும் தூண்டப்படுகிறது.

இது வலுவானதும், நிலையானதுமான வளர்ச்சியை ஊக்கிவிக்கும் என, moodys நம்புகிறது. அந்த நம்பிக்கை வீன் போகாது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சர்வதேச, பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ், 13 வருடங்களுக்கு பின்னர் மேற்கொண்ட தர மதிப்பீட்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என கணித்துள்ளது.

இது குறித்து தனது கருத்தை டுவிட்டர் மூலம் முன்வைத்துள்ள பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg