Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யோகி ஆதித்யநாத் – பில்கேட்ஸ் சந்திப்பு!

In இந்தியா
Updated: 13:28 GMT, Nov 17, 2017 | Published: 13:28 GMT, Nov 17, 2017 |
0 Comments
1286
This post was written by : Kemasiya

உ.பி.கோரக்பூர் அரச மருத்துவமனையில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் குறித்து, அம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மைக்ரோசொப்ற் நிறுவுனர்  பில்கேட்ஸ்சிற் ஆகியோருக்கிடையில், கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ், இன்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் யோகி அதித்யநாத்தை சந்தித்தித்த போதே, உ.பி.மருத்துவமனை குறித்து பேசப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

உத்தரப் பிரதேசத்தில், தொடர்ந்தும் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பிலும், குறிப்பாக அண்மையில் 105 பேர் உயிரிழந்த விடயம் தொடர்பிலும், பில்கேட்ஸிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக பிறக்கும் குழந்தைகள், மூச்சுதிணறல் மற்றும் மூளை நோய் காரணமாக உயிரிழக்கின்றமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிலையில், குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்த பிஸ்கேட்ஸ், ‘மெரிண்டா அறக்கட்டளை நிறுவனத்தினூடாக’ உ.பி.அரசாங்கத்துடன் இணைந்து, அம் மாநில ஊட்டச்சத்து தேவை குழந்தைகள், தாய்மாரின் தேவைகளை நிறைவேற்ற, உதவி புரிய விரும்புவதாகவும்  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg