Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: பிரான்ஸின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

In ஐரோப்பா
Published: 10:26 GMT, Nov 18, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Suganthini
france

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரான்ஸின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லையென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சுவீடன் கோதன்பெர்க்கில் நடைபெற்ற மாநாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது குடிமக்கள் உரிமை, அயர்லாந்து எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில், பிரெக்சிற் சட்டமூலம் நிறைவேற்றப்படும்வரை, எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுக்கும்; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறமாட்டாது’ என்றார்.

‘பிரெக்சிற் விவகாரத்தில் முதற்கட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதவரையில், எதிர்கால வர்த்தக உறவு பற்றிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கமாட்டோம்.

மேலும், பிரான்ஸைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறையை மாற்றியமைக்க முற்படமாட்டோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg