Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

In இலங்கை
Published: 17:12 GMT, Nov 18, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Ravivarman
kilinochi (1)

மக்கள் ஆட்சிக்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கல் சம்பந்தமாக மக்களின் ஆதரவு வேண்டி கையொப்பம் சேகரிக்கும் வேலைத்திட்டத்திற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் அன்பிற்கும் நட்புக்குமான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இக் கருத்தரங்கில் புதிதாக வெளிவரவுள்ள அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன், பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்கல், படையினர் வசமுள்ள காணிகளை மீளப்பெறல், மாகாணசபை அதிகாரத்தை வலுப்படுத்தல், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், ஒவ்வொரு குடிமகனுக்கு வீடு புதிய தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிட்டனர்.

நிகழ்வின் இறுதியில் மக்களிடம் புதிய அரசியல் யாப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தி கையெழுத்தும் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg