Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா – இலங்கை மோதும் ஒரு நாள் போட்டிகளில் திடீர் மாற்றம்!

In கிாிக்கட்
Updated: 10:35 GMT, Nov 20, 2017 | Published: 08:06 GMT, Nov 20, 2017 |
0 Comments
2393
icon_com
This post was written by : Puvanes
india vs srilanka001

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன் படி தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து டிசம்பர் 10ஆம் திகதி தர்மசாலாவின் முதலாவது ஒரு நாள் போட்டியும், டிசம்பர் 13ஆம் திகதி மொகாலி மைதானத்தில் 2ஆவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளன.

குறித்த போட்டிகள் இரண்டும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் போட்டி நடைபெறவுள்ள இரு மைதானங்களிலும் கடும் குளிர் மற்றும் பனிப்பெழிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போட்டிகள் காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் திகதி விசாகப்பட்டணத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg