Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் புதிய பாடத்திட்டம்: முதல்வரால் வெளியிடப்பட்ட வரைபு!

In இந்தியா
Published: 09:34 GMT, Nov 20, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Kemasiya
edapay

தமிழகத்தில் பாடசாலைக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தின் வரைபை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு வைத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் வைத்து, சம்ரதாய பூர்வமாக இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழக பாடசாலை கல்வித்திட்டத்தில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம், 14 ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளுக்கு பின்னர்  மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான வரைபு, பாடசாலை கல்வித்துறை திணைக்களத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைபில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என, பாடசாலை ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள், பெற்றோர்கள் கருதினால், தங்கள் கருத்துக்களை குறித்த இணையத்தில், ஜனவரிக்கு முன்னர் பதிவிட வேண்டும் என, பாடசாலை கல்வித்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனவரி இறுதிக்குள் குறித்த திட்டம் முழுமைப்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg