Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை!

In இந்தியா
Updated: 12:26 GMT, Nov 20, 2017 | Published: 12:19 GMT, Nov 20, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Kemasiya
BL03TAMILISAI_2837522f

ஜி.எஸ்.டி.குறைக்கப்பட்டாலும், சில உணவகங்களில் சாப்பாட்டின் விலை குறைக்கப்படவில்லை என, தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை, உணவகங்களுக்கு நேரில் சென்று உணவுகளின் விலை குறித்து ஆய்வு செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஜி.எஸ்.டி.குறைக்கப்பட்ட பின்னரும், உணவின் விலைகள் குறைக்கப்படாமல் உள்ளமை மனதிற்கு வருத்தத்தை தருகிறது. எனவே இன்று தி.நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரில் விஜயம் செய்து, விலை குறித்து எமது இளைஞர் அணி ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

இதன் போது விலை குறைக்கப்பட்ட கடைகளை பாராட்டியும், விலையை அதிகரித்துள்ள கடை உரிமையாளர்களுக்கு அவற்றை உடனடியாக நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் மீறி நீக்காவிடின், குறித்த கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg