Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகுல் தலைமையில் பயணிப்போம்: திருநாவுக்கரசர் அழைப்பு!

In இந்தியா
Updated: 06:54 GMT, Nov 21, 2017 | Published: 06:54 GMT, Nov 21, 2017 |
0 Comments
1211
This post was written by : Ravivarman

காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் ராகுல் காந்தியின் தலைமையில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எமது பயணம் அமையட்டும் என்று அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், கட்சித் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான காங்கிரஸ் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இதைவிட மகிழ்ச்சியான செய்தி காங்கிரஸ் ஊழியர்களுக்கு இருக்க முடியாது.

நேரு பாரம்பரிய தலைமை என்பது வாரிசு அடிப்படையில் வந்தது அல்ல. ராஜீவ் காந்திக்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தினர் மத்திய அரசில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. அதற்கு மாறாக கட்சி வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

தேசிய அளவில் மோடி தலைமையிலான பிற்போக்கு சக்திகளை வீழ்த்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தலைமையில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எமது பயணம் அமையட்டும்” என சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg