Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்குவினால் உயிரிழந்த சிறுமி! – மருத்துவ கட்டணமாக 18 இலட்சம் கேட்ட மருத்துவமனை

In இந்தியா
Updated: 06:21 GMT, Nov 22, 2017 | Published: 06:21 GMT, Nov 22, 2017 |
0 Comments
1564
icon_com
This post was written by : Puvanes
child_death001

டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சிறுமி ஒருவரின் மருத்துவ நடவடிக்கைகளுக்காக 18 இலட்சம் பற்றுச்சீட்டினை தனியார் மருத்துவமனை ஒன்று வழங்கி பணம் அறவிட்ட சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி – துவாரகா பகுதியைச் சேர்ந்த ஜெயந்த சிங் என்பவருடைய 7 வயது மகளான ஆத்யா சிங் கடந்த ஓகஸ்ட் மாதம்31ஆம் திகதி குர்கான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் வரையிலான பணத்தினை சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு செலுத்தியிருந்தபோதும், சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 14ஆம் திகதி சிறுமி மரணமடைந்துள்ளார். எனினும் ஊசிகள் வாங்கிய செலவு, மருத்துவர்களுக்காக கையுறைகள் வாங்கியது என்பன உள்ளடங்களாக 18 இலட்சம் கட்டணத்திற்காக பற்றுச்சீட்டினை குறித்த மருத்துவமனை வழங்கியுள்ளது.

சிறுமிக்கு ஒருநாளைக்கு 44 ஊசிகள் வீதம் மொத்தமாக 660 ஊசிகளை மருத்துவர்கள் போட்டுள்ளதாகவும் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஜெயந்த் வெளிப்படுத்தாத போதும் மருத்துமனையின் செயற்பாடு குறித்து அவருடைய நண்பர் ஒருவர் டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதன் பின்னர் சிறுமிக்கு தகுந்த சிகிச்சைகளே வழங்கப்பட்டன. அவருக்கு 15 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவே மருத்துவ கட்டணமாக விதிக்கப்பட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் மத்திய சுகாதார அமைச்சர், ஜே.பி. நட்டாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, இந்த விடயம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவமனையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், விரைவில் விரிவான விளக்கத்தினை மருத்துவமனையிடம் கோரியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg