Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனித யோசப்வாஸ் ஆண்டின் நிறைவு நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 10:07 GMT, Nov 22, 2017 | Published: 10:03 GMT, Nov 22, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Elakkiya
IMG_1193

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையினால் பிரகடனப்படுத்தப்பட்ட புனித யோசப்வாஸ் ஆண்டின் நிறைவு நிகழ்வுகள்  மட்டக்களப்பில் நேற்று மாலை இடம்பெற்றன.

திருத்தந்தையினால் பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினால் வழிநடத்தப்பட்ட புனித யோசப்வாஸ் ஆண்டினை நிறைவு செய்யும் விசேட திருப்பலியும், நிறைவு நிகழ்வுகளும் இலங்கை கத்தோலிக்க மறை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தொடர்ந்து பேரணியும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் விசேட நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட மேய்ப்புப்பணிச்சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு மறை மாவட்ட ஆயரும் மேய்ப்புப்பணிச்சபை தலைவருமான கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமை தாங்கியிருந்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க பங்கு மேய்ப்புப்பனிச் சபைகளின் உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், அப்போஸ்தலிக்க சபை உறுப்பினர்கள் பங்கு பக்தி சபையினர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1208 IMG_1214 IMG_1268 IMG_1275 IMG_1306 IMG_1332

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg