Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியை வேவு பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்! – நிலவைப்பற்றிய அதிர வைக்கும் தகவல்

In அறிவியல்
Updated: 13:42 GMT, Nov 23, 2017 | Published: 13:42 GMT, Nov 23, 2017 |
0 Comments
4342
icon_com
This post was written by : Puvanes
moon006

பூமியின் துணைக் கோளான நிலவானது, பூமியை நோட்டமிட வேற்றுக்கிரகவாசிகளினால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மர்மத்தளம் என ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவு பூமியின் இயக்கத்திற்கு இன்றியமையாதது. என்ற போதிலும் நிலவு குறித்த மர்மங்கள் தொன்றுதொட்டு வந்த வண்ணமே காணப்படுகின்றது.

இதுவரையில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்தப்படாத நிலையில் நிலவு எனப்படுவது பூமியை அதன் அருகில் இருந்து அவதானிக்க வேற்றுக்கிரகவாசிகளினால் கட்டப்பட்டது எனவும், நிலவில் இருந்து பூமி அவதானிக்கப்படுகின்றது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிக் கூறுகளை அவதானித்த போது அதில் மைய்கா, பிராஸ், யுரேனியம் 236, நெருப்பியம் 237 போன்ற செயற்கைக் கணிமங்கள் காணப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான கணிமங்கள் நிலவில் இயற்கையாக உருவாகுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் இவை அணுசக்திச் செயற்பாட்டின் பின்னர் பெறப்படும் கணிமங்களைச் சாரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று 1969 நிலவில் வெடிப்பினை ஏற்படுத்தி ஆய்வு செய்வதற்காக நாசாவானது லூனர் மொடல் எனப்படும் செய்மதியை நிலவின் மேற்பரப்பில் மோதச் செய்துள்ளது.

இதன் மூலம் நிலவின் ஈர்ப்புத் தன்மை, தரைப்பரப்பின் வடிவமைப்பு போன்றவற்றினை அறிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே இத்தகைய பரிசோதனையில் நாசா ஈடுபட்டது.

குறித்த மோதலின் பின்னர் தொடர்ந்தும் மணியோசையின் போது கேட்கப்படும் அதிர்வு ஒலி கேட்டுள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலவு உலோகத்தினால் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர் எனினும் இதுவரையிலும் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.

அதேபோன்று சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே நிலவு மட்டுமே அதி துல்லிய சுற்றுவட்டப்பாதையினைக் கொண்டது என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பூமியின் சுழற்சிக்கு ஏற்ப நுல்லியமாக நிலவு சுற்றி வருகின்றது. சூரிய மண்டலத்தில் உள்ள எந்த கோளுக்கும் அல்லது துணைக்கோளுக்கும் இத்தனை நுல்லிய சுற்றுப்பாதை இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அதுமட்டுமல்லாது பூமியின் எந்தக் கோணத்தில் இருந்தும் நிலவினைப் பார்த்தால் அதன் ஒரு பகுதி மட்டுமே தெரியும் இருண்ட அதன் மறுபக்கம் தெரிவதில்லை இத்தனை துல்லிய வடிவமைப்பு இயற்கையில் சாத்தியம் இல்லை.

இது இவ்வாறிருக்க நிலவுப் பயணங்களின் போது வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலங்களும், பறக்கும் தட்டுகளும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

பூமியைத் தாண்டி ஏனைய கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் நிலவிற்கு மணிதர்களை அனுப்புவதற்கு மட்டும் அச்சத்தினை வெளிப்படுத்தியே வருகின்றது என்பது விண்வெளி ஆய்வுகளை அவதானிக்கும் போது தெரிய வருகின்றது.

நிலவானது விண்வெளிப் பாறைகள் மற்றும் தூசுகள் கொண்ட 3 மைல் அளவிலான மேற்பரப்பினையும் உள்ளே ஷெல் வடிவமைப்புடன் கூடிய அதிர்வுகளைத் தாங்கக்கூடிய பலமான கட்டமைப்பு காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஆதாரங்களை முன்வைக்கும் ஆய்வாளர்கள் நிலவு பூமியை நோட்டமிடும் மர்மத்தளம் எனவும், பூமிக்கு வந்து செல்லும் பறக்கும் தட்டுகள் நிலவில் இருந்தே வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும், நிலவில் பிளாக்ஹோல் எனப்படும் பிரபஞ்சப் பயணங்களை மேற்கொள்ள உதவும் வாயில்கள் காணப்படலாம். தொன்று தொட்டு பூமியின் செயற்பாடுகளை நிலவில் இருந்து வேற்றுக் கிரகவாசிகள் அவதானித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

moon001 Moon002 Moon005

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg