Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

15 டொலர்களாக உயரும் மணித்தியால ஊதியம்: ஒன்ராறியோவில் தீர்மானம் நிறைவேற்றம்

In கனடா
Published: 14:37 GMT, Nov 24, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Anojkiyan
lab

ஒன்ராறியோவில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தினை மணித்தியாலாத்திற்கு 15 டொலர்களாக அதிகரிக்கும் தீர்மானம் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய தொழிலாளர் சட்டத் திருத்தம், ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேறியுள்ளது.

தற்போது மணித்தியாலாத்திற்கு 11 டொலர்கள் 60 சதங்களாக உள்ள குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் நாளில் இருந்து 14 டொலர்களாக அதிகரிக்கப்படும் எனவும், 2019ஆம் ஆண்டில் 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பள அதிகரிப்பானது வேலை வழங்குவோர் மத்தியில் ஒருவித சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதுடன், இவ்வாறான வேகமான சம்பள அதிகரிப்பு வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவுக்கான சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடாத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் தேர்தலுக்கு முக்கிய பலம்வாய்ந்த தூணாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg