Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் இலங்கை பெண் படுகொலை!

In இலங்கை
Updated: 17:32 GMT, Nov 28, 2017 | Published: 12:18 GMT, Nov 28, 2017 |
0 Comments
1874
This post was written by : Vithushagan

அமெரிக்காவில் உள்ள நிவ்யோர்க் Staten தீவு பகுதியில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் Staten தீவு பகுதியை சேர்ந்த கீதா எனப்படும் 63 வயதான இலங்கை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது முகம் மற்றும் உடலில் கிட்டத்தட்ட 15 கத்தி குத்து காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை காப்பாற்ற முயற்சித்த Mark என்ற 56 வயதுடைய நபர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

பெண் ஒருவர் மீது கொடூரமான கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அவதானித்த அயல் வீட்டு நபர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதனை அவதானித்த சந்தேக நபர் மேலும் தீவிரமாக அவரை குத்திவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார் 27 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கீதா வங்கிக்கு சென்று வந்த சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் ஒன்று கொலை சம்பவமாக மாறியுள்ளதென கீதாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg