Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சாலைப்பூக்கள்’ டிசம்பர் 10 இல் வெளியாகிறது

In
Published: 04:30 GMT, Nov 30, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Varothayan
24068772_10210666176958929_2057176723108657782_o

ஈழத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், இயக்குனர் சுதர்சன் ரட்ணத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவான ‘சாலைப்பூக்கள்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 10 முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழா, தென்னிந்திய கலைஞர்கள் முன்னிலையில், டிசம்பர் 10 அன்று யாழ் ராஜா திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது.

இப்படத்திற்கான இசையை சிறிநிர்மலனும், பாடல் வரிகளை, செல்வா முகுந்தனும், படத்தொகுப்பை ஜெய் லோகேந்திரா மற்றும் இளங்கோ சிறிலும் மேற்கொண்டுள்ளனர்.

வினித், லங்கேஸ், நிருசன், டினோ, நவயுகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg