Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதத்தினரிடையிலான ஒற்றுமை நாட்டின் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 04:04 GMT, Dec 1, 2017 | Published: 04:03 GMT, Dec 1, 2017 |
0 Comments
1204
icon_com
This post was written by : Risha
maithri20151003

வெவ்வேறு சமயங்களை பின்பற்றுகின்ற அனைவரும் சமாதானமாக வாழ்வதானது, நாட்டின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாதுன் நிகழ்வை முன்னிட்டு, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சகல இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”நாட்டில் பல்வேறு சமூக, கலாசாரங்களை கொண்ட மக்கள் பல்வேறு சமயங்களை பின்பற்றுகின்ற போதிலும், சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இது நாட்டு மக்களிடையிலான சக வாழ்விற்கும், நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”நபியவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபியவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.

இலங்கைவாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் சிறப்பான மீலாதுன் நபி தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg