Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித்தின் ‘விசுவாசம்’ –முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்!

In சினிமா
Updated: 14:49 GMT, Dec 1, 2017 | Published: 05:25 GMT, Dec 1, 2017 |
0 Comments
1323
This post was written by : Elakkiya

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகவுள்ள ‘விசுவாசம்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த திரைப்படம் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக அமையும் என்றும் 2018 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், திரைப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு இடம்பெற்று வருவதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பித்து சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் இத்திரைப்படம் தயாராகவுள்ளது.

நடிகர் அஜித்தின் வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவா அதுதவிர சிறுத்தை மற்றும் வீரம் ஆகிய தமிழ் படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தினையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg