Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கினால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்: ஜீ.எல்.பீரிஸ்

In இலங்கை
Updated: 15:31 GMT, Dec 1, 2017 | Published: 06:40 GMT, Dec 1, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Ravivarman
83869251_pmreuters4

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தினது நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார் .இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சி மீது அச்சம் கொண்டுள்ளதால் கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளை அடக்குவதற்கு முயற்சிக்கின்றது.

எனவேதான் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றுவோம் என அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை அச்சமூட்டி அவர்களை ஒப்பந்தங்களுக்குள் அடிபணிய வைக்க முடியாது.

மக்களால் தெரிவு செய்த உறுப்பினர்களை இவ்வாறு பதவியில் இருந்து அரசாங்கம் நீக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அவற்றைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு நாம் தயார்” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg