Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு ரூபாய் பணத்தாளுக்கு நூறாண்டு விழா!

In இந்தியா
Published: 09:40 GMT, Dec 1, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Risha

இந்தியாவின் சின்னமாக விளங்கும், முதலாம் உலகப் போர் சகாப்தத்தின் போது வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் பணத்தாள் புழக்கத்திற்கு வந்து நூறாண்டுகள் ஆகின்றன.

இந்திய ஒரு ரூபாய் பணத்தாளானது கடந்த 1917ஆம் ஆண்டு நொவம்பர் 30ஆம் திகதி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு முன்பு ஒரு ரூபாய் வெள்ளி நாணயமே புழக்கத்தில் இருந்தது. முதலாவது உலகப்போரின்போது, வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து பணத்தாளாக அச்சிடப்பட்டது.

ஒரு ரூபாய் பணத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த 1926 மற்றும் 1994 ஆகிய காலப்பகுதியில் இப்பணத்தால் அச்சிடும் நடவடிக்கைகள் இரண்டு முறை நிறுத்தப்பட்டன.

ஆனால், அதற்கான மதிப்பு மற்றும் கேள்வி காரணமாக பணத்தாள் அச்சிடும் நடவடிக்கைகள் 2014-2015ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கியுள்ளது.

அவ்வப்போது அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு, வடிவமைப்பு மாற்றப்பட்டு தற்போது 125 வடிவமைப்புகளில் ஒரு ரூபாய் பணத்தாள் புழக்கத்தில் காணப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg