Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விண்டோஸ் 10 பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது!

In தொழில்நுட்பம்
Updated: 10:58 GMT, Dec 9, 2017 | Published: 10:51 GMT, Dec 9, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Vithushagan
201712011217142588_Windows-10-active-on-600-million-devices_SECVPF

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின்  விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியான சில வருடங்களில் உலகம் முழுக்க 60 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 கோடியை கடந்தது சர்வதேச சந்தையில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 கோடிகளை கடந்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் விண்டோஸ் 10 இயங்குதளத்தை தங்களது கணினியில் பயன்படுத்தி வருகின்றனர் என மைக்ரோசொப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட வருடாந்திர கூட்டத்தில் இந்த தகவலை சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டிற்குள் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை குறிவைத்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை குறைவானதாகவே பார்க்கப்படுகிறது. விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தப்பட்டதே பயனர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.

அண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்கள் வழங்கும் போட்டி காரணமாக விண்டோஸ் 10 அப்டேட் நிறுத்தப்பட்டது.

சர்வதேச சந்தையில் கூகுள் மற்றும் அப்பிள் நிறுவன இயங்குதளங்கள் மட்டும் 99 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது என கார்ட்னர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்குதள பிரிவு துணை தலைவர் ஜோ பெல்ஃபோரி, மொபைல் போன்களுக்கான விண்டோஸ் 10 இனி வழங்கப்பட மாட்டாது என்ற தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த இயங்குதளத்திற்கான பிழை திருத்தங்கள், பாதுகாப்பு அப்டேட் உள்ளிட்டவை மட்டும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)