Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு கல்வி வலய சுகாதார கழக பரிசளிப்பு விழா

In இலங்கை
Updated: 07:24 GMT, Dec 2, 2017 | Published: 04:31 GMT, Dec 2, 2017 |
0 Comments
1081
This post was written by : Risha
DSC02345

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார கழகங்களுக்கான பரிசளிப்பு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த நிகழ்வு மட்டக்களப்ப வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தி கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சுதர்சினி இராஜேந்திரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கணக்காளர் கே. சபேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடசாலைகளில் சுகாதார முறையை பேணும் வகையில் இந்த சுகாதார கழகங்கள் அமைக்கப்பட்டு சுகாதார முறைகள் பேணப்பட்டுவருவதுடன் அவை சுகாதார பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது, சிறப்பான முறையில் இயங்கிய பாடசாலைகளும் சுகாதார கழக மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். சுமார் 726 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன.

DSC02205 DSC02206

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg