Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை – இந்திய கடற்படையினர் பேச்சுவார்த்தை!

In இந்தியா
Published: 04:55 GMT, Dec 2, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Vithushagan

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக இந்திய-இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா போர் கப்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திபிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துளார்.

தொடர்து கருத்து தெரிவித்த அவர் ”ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிழக்கு பிராந்திய கடற்படை செய்து வருகிறது.

இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் சிக்கி கொண்டால் அவர்களை மீட்பதற்கு கடற்படை எப்போதும் தயாராக உள்ளது. வருங்காலங்களில் மீனவர்கள் எல்லை பகுதியில் சுமுகமாக மீன் பிடிப்பதற்கும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அடுத்த மாதம்(ஜனவரி) இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது இந்திய கடற்படையினர் இல்லை. அவர்கள் கடலோர பாதுகாப்பு படையினர். சென்னையில் கடற்படை தளம் அமைப்பதற்காக தமிழக அரசிடம் இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கடலில் தத்தளித்த 14 மீனவர்கள் இதுவரை எங்களது வீரர்களால் மீட்கப்பட்டு உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg