Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து எல்லை விவகாரம்: நம்பகரமான தீர்வுக்கு வலியுறுத்து

In
Published: 05:02 GMT, Dec 2, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Suganthini

அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக நம்பகரமானதும் உறுதியானதுமான தீர்வை பிரித்தானியா முன்வைக்க வேண்டுமென, அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் வலியுறுத்தியுள்ளார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் அயர்லாந்துப் பிரதமருக்கிடையிலான சந்திப்பு, அயர்லாந்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்துக்கு பிரித்தானியா செல்ல விரும்பினால், அயர்லாந்து எல்லை விவகாரத்துக்கு, உறுதியானதும் நம்பரமானதுமான தீர்வை முதலில் பிரித்தானியா முன்வைக்க வேண்டும்.

அயர்லாந்து எல்லை விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை இருக்காதென்பதை, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம், பிரித்தானியா உறுதிப்படுத்த வேண்டும்’ என்றார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க், ‘பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக திருப்திகரமான தீர்வை பிரித்தானியா முன்வைக்க வேண்டுமெனவும், திருப்திகரமான தீர்வை பிரித்தானியா முன்வைக்கத் தவறும் பட்சத்தில், எதிர்கால வர்த்தக உடன்படிக்கை மற்றும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கான பிரித்தானியாவின் கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரிக்கும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg