Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணிலை விட மறுத்தால், மைத்திரியுடன் இணைய தயாரில்லை – மஹிந்த

In இலங்கை
Published: 05:33 GMT, Dec 2, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Arul Jesu
President-Mahida-Rajapaksa

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விலக மறுத்தால் கூட்டு எதிரணியும் அந்த கட்சியுடன் இணையவதற்கு தயாராகாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராக இடமளித்திருக்க மாட்டேன் எனவும் கூறினார்.

மேலும், அரசாங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை மாத்திரமே முன்னிறுத்தி செயற்படுவதாக தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து யாவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும் கூறினார்.

ஆனால், சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்திருக்கும் போது அவ்வாறு இணைந்து செயற்பட முடியாது என கூறிய அவர், அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் யாருக்காகவும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியாது என தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அவர்கள் அப்படி கூறினால் கூட்டு எதிரணிக்கும் சுதந்திரக்கட்சியுடன் இணைய விருப்பும் இல்லை என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)