Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுவையையில் ஊழல் குறைந்துள்ளது: ஆளுனர் கிரண்பேடி

In இந்தியா
Published: 07:04 GMT, Dec 2, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Vithushagan

புதுவையையில்   சிறப்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஊழல் குறைந்துள்ளது என  ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில நிர்வாகத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இது     தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுனர் கிரண்பேடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”புதுவைக்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

புதிய தலைமை செயலாளர் விதிமுறைகளை பின்பற்றி வருவதால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பணிகளும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் தலைமை செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தது தலைமை செயலாளரின் பொறுப்பை உணர்ந்து அவர் செயல்படாததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது.

புதுவை விமான நிலையம் முறையாக இயக்கப்படவில்லை என்கின்ற முதலமைச்சரின் குற்றசாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் விமான சேவைகள் மேம்படுத்தப்படும்.

புதுவை பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் மாணவர்களின் தரம் மேம்படும்.

மேலும் புதுவையை பொறுத்தவரையில்  சிறப்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஊழல் குறைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)