Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹவாயில் அணுவாயுதத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிச் சோதனை

In
Published: 07:15 GMT, Dec 2, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒலிச் சோதனை நடத்தப்பட்டது.

வடகொரியாவின் அணுவாயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

1980ஆம் ஆண்டு இடம்பெற்ற பனிப்போரின்போது, அணுவாயுதத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி சோதனை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 37 வருடங்களின் பின்னர்,  முதற்தடவையாக ஹவாய் மாகாணத்தில் இந்த ஒலிச் சோதனை நடத்தப்பட்டது.

இதேவேளை, சுனாமி உட்பட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கை ஒலிச் சோதனை, மாதாந்தம் ஹவாயில் இடம்பெற்று வருகின்றது.

ஆனால், அணுவாயுதத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி வித்தியாசமான  ஒலியில் ஒலிப்பதுடன், அடுத்த கட்ட அறிவிப்பு வரும்வரை மக்களை வீடுகளினுள் இருக்குமாறும் அறிவுறுத்துகின்றது.

இந்த ஒலிகளின் வித்தியாசத்தை மக்கள் புரிந்துவைத்திருக்க வேண்டுமென, ஹவாய் அவசரசேவை முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணை 20 நிமிடங்களில் ஹவாயைத் தாக்கக்கூடுமென்று பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் ஆசிய பசுபிக் பகுதிக்கான தலைமையிடமாக ஹவாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg