Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் வெடிபொருள் மீட்பு

In ஐரோப்பா
Published: 08:13 GMT, Dec 2, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Suganthini

ஜேர்மனியின் பொட்ஸ்டம் (Potsdam) சந்தையிலிருந்து வெடிபொருளொன்றை பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, சந்தையிலிருந்த அனைவரையும் பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர்.

உலோகக் குழாயொன்றில் ஒரு வகையான தூளும் அதனுடன் ஆணிகளும் காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சந்தைக்கு அருகிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையின் பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம், கிறிஸ்மஸ் சந்தையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றையடுத்து, இதுவரைகாலமும் மூடப்பட்டிருந்த அச்சந்தை, கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது.

பயங்கரவாத அமைப்பொன்று, டிரக் வண்டியொன்றைக் கடத்தி அதன் சாரதியைக் கொலை செய்துவிட்டு, அவ்வாகனத்தால் கிறிஸ்மஸ் சந்தையிலுள்ளவர்கள் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்தே, கிறிஸ்மஸ் சந்தை இதுவரைகாலமும் மூடப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg