Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைநகரின் புதிய பரிணாமம் ‘ஹைற்றர் டவர்’

In இலங்கை
Published: 08:15 GMT, Dec 2, 2017 |
0 Comments
1465
icon_com
This post was written by : Risha

தலைநகரின் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வரலாற்றில் புதிய பரிணாமமாய் ‘ஹைற்றர் டவர்’ விளங்கும் என ‘ஹைற்றர் டவர்’ பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் தலைவரும் குறித்த துறையின் பதினைந்து வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தை உடையவருமான சண் குகவரதன் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்தின் முதலாவது திட்டத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வினை தொடர்ந்து ஆதவனுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கலந்துரையாடல் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கட்ட இத்திட்டம், கடந்த பதினைந்து வருடங்களாக தலைநகர் வாழ் மக்களின் தேவையறிந்து அவர்களுடைய மனோநிலை உணர்ந்த தன்னுடைய அனுபவத்தின் பிரதிபலிப்பாக இத்திட்டம் அமையும் எனவும் இதேபோன்று மிகவிரைவில் பம்பலபிட்டி, தெஹிவளை போன்ற இடங்களிலும் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் குகவரதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – 6, ஐ.பி.சி. வீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த நிறுவனத்தின் முதலாவது திட்டத்தில் நீச்சல் தடாகம், உடற்பயிற்சி நிலையம் ஆகியவற்றுடன் இருபதிற்கும் மேற்பட்ட அதிசொகுசு வீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Sequence 09.00_06_28_23.Still002 Sequence 09.00_12_03_19.Still004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg