Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் விராட் கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 09:25 GMT, Dec 2, 2017 | Published: 09:24 GMT, Dec 2, 2017 |
0 Comments
1372
icon_com
This post was written by : Elakkiya
qck_607ff_1512200229

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகின்ற நிலையில் விராட் கோஹ்லி மேற்படி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் நான்காவது வீரராக களமிறங்கியுள்ள விராட் கோஹ்லி 100 ஓட்டங்களை கடந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 ஆவது இந்திய வீரர் இவர் ஆவார். 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோஹ்லி, 105 ஆவது இன்னிங்சில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg