Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: சில விமானசேவைகள் ரத்து

In உலகம்
Published: 12:22 GMT, Dec 2, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Suganthini

இந்தோனேஷியாவின் பாலி தீவிலுள்ள ‘மௌண்ட் அகுங்’ எனும் எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் பரவியுள்ளதால், சில விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாலி தீவிலுள்ள விமான நிலையம் வழமைபோன்று இயங்கி வருகின்றது. இருப்பினும், இவ்விமான நிலையத்திலிருந்து சில விமான சேவைகள் இன்று (சனிக்கிழமை) ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடுமையாக சாம்பல் பரவிவரும் நிலையிலேயே, விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும்இதனால், பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், மேற்படி அதிகாரி கூறியுள்ளார்.

54 வருடங்களின் பின்னர், ‘மவுண்ட் அகுங்’ எரிமலை கடந்த 25ஆம் திகதி, வெடித்தது. முதற்தடவையாக கடந்த 1963ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது, சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், இந்த எரிமலை இரண்டாவது தடவையாக  வெடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg