Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன்: விஷால்

In சினிமா
Published: 13:30 GMT, Dec 2, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Ravivarman
201712021408037494_Vishal-to-announce-about-his-participation-of-RK-election-in_SECVPF

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து 2 நாளில் முடிவு எடுப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சினிமாத்துறையில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. அன்றையதினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுத்தாக்கல் செய்தனர்.

மேலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இதேவேளை, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)