Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ATM அட்டை மோசடிக் கும்பல் கைது- இலங்கையை சேர்ந்தவருக்கும் தொடர்பு!

In இந்தியா
Updated: 12:20 GMT, Dec 3, 2017 | Published: 06:17 GMT, Dec 3, 2017 |
0 Comments
1660
icon_com
This post was written by : Elakkiya
03-VJ-ATMGANG

தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை (ATM) குளோனிங் குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐவர் சித்தூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலுடன் இலங்கை மற்றும் மும்பையைச் சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவருகின்றது.

பலாமனர் பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த ஐவிடமிருந்தும் பணப்பரிமாற்ற அட்டையை குளோனிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரம், சேகரிக்கப்பட்ட இரகசிய இலக்க விபரங்கள், மற்றும் ஸ்வைப் இயந்திரங்களுடன் இந்திய பெறுமதியில் பத்து லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பத்திரையாளர் சந்திப்பில் தகவல் வெளியிட்டுள்ள டி.எஸ்.பி கே சௌதேஸ்வரி, 70 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான விசாரணைகளின் பின்னர் மேற்படி ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதான தெரிவித்துள்ளார். அத்துடன் மாநிலத்தில் பதிவு செய்யப்படும் முதலாவது சைபர் குற்றம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பலாமனர்  பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை மூலமாக 1.58 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்திருந்தார். ஒரு சில வாரங்களில் இவ்வாறு பல்வேறு வங்கிகளில் கணக்கினை கொண்டுள்ள 22 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து சைபர் குற்றச்சாட்டுக்களை கையாளும் டி.எஸ்.பி கே சௌதேஸ்வரியிடம் குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி பலாமனரில் சித்தூர் பஞ்சாணி, ரேணிகுண்டா மாவட்ட ஏ.டி.எம்களில் இரகசிய இலக்கங்களை பெறுவதற்காக வை-பை இணைக்கப்பட்ட சிசி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமையும் அவற்றினூடாக தகவல்களை பொருத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை ஆராய்ந்து பார்த்ததில் இலங்கையைச் சேர்ந்த அல்பிரட் பாலா குமார் மற்றும் மும்பையைச் சேர்ந்த உமேஷ் ஆகியோரிடமிருந்து மேற்படி கும்பல் குளோனிங் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டதும் அதற்காக அவர்களுக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் அவர்களை கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg