Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத தடுப்புகள் குறித்து ஆராய இலங்கை வருகிறது ஐ.நா. குழு

In இலங்கை
Updated: 12:15 GMT, Dec 3, 2017 | Published: 08:21 GMT, Dec 3, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Risha
UN-Building

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத தடுப்புகள் குறித்து ஆராயும் வகையிலும், ஜெனீவா தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து கண்டறியும் வகையிலும் ஐக்கிய நாடுகளின் சிறப்புக் குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது.

நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கு வரும் ஐ.நா. குழுவினர், தொடர்ந்து பன்னிரெண்டு தினங்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவினர், கிழக்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட நாட்டின் முக்கிய சில இடங்களுக்கு பயணிக்கவுள்ளதுடன், அரசியல் தரப்புகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது திரட்டப்படும் தகவல்கள் மதிப்பீட்டு அறிக்கையாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜோஸ் அன்டோனியோ, லெயிக் டூமி மற்றும் எலினா ஸ்டீனேர்ட் ஆகிய நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினரே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg