Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டுப் பயிற்சி: வடகொரியா கண்டனம்

In
Published: 10:27 GMT, Dec 3, 2017 |
0 Comments
1328
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு விமானப்படைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா,  இது  வடகொரியாவுக்கு எதிரான   மிகப்பெரிய விமானப்படை பயிற்சி எனவும் கூறியுள்ளது.

கொரிய தீபகற்பமோ அல்லது சர்வதேச நாடுகளோ அணுவாயுதப் போரை எதிர்நோக்க நேரிட்டால், அதற்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டுமெனவும் வடகொரிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு விமானப்படைப்  பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிந்த நிலையிலேயே, வடகொரியா  நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது,

அமெரிக்காவும் தென்கொரியாவும் நாளை (திங்கட்கிழமை) முதல் 8ஆம் திகதிவரை கூட்டு விமானப் படை பயிற்சியில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

தென்கொரியப் படையினருடன் அமெரிக்கப் படை வீரர்கள் 12 ஆயிரம் பேர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும், 230 விமானங்கள் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களிலிருந்து  பறந்துசென்று  பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg