Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இ.தொ.காவுடன் இணைந்தார் பிரபா கணேசன்!

In இலங்கை
Updated: 15:10 GMT, Dec 3, 2017 | Published: 15:10 GMT, Dec 3, 2017 |
0 Comments
1402
This post was written by : Ravivarman

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திட்டுள்ளது.

இது குறித்த நிகழ்வானது கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதனடிப்படையில், கொழும்பு,கொலன்னாவை,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரபா கணேசன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg