Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் விவகாரம்: பாரிய ஆபத்தென ஜோர்டான் எச்சரிக்கை

In உலகம்
Published: 04:19 GMT, Dec 4, 2017 |
0 Comments
1336
icon_com
This post was written by : Suganthini
jer

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரிக்கும் பட்சத்தில், பாரிய விளைவைச் சந்திக்க நேரிடுமென, ஜோர்டான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்து, நாளைமறுதினம் (புதன்கிழமை) அமெரிக்கா அறிவிக்கவுள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸனுக்கு விடுத்துள்ள டுவீட்டர் செய்தியிலேயே, ஜோர்டான் வெளிவிவகார அமைச்சர் அய்மன் சபாஃடி (Ayman Safadi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜோர்டான் வெளிவிவகார அமைச்சர் சபாஃடி தெரிவித்தபோது, ‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தால், உலகளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும், அரேபிய நாடுகள் மத்தியிலும் பாரிய கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என்றார்.

மேலும், ‘இந்த நடவடிக்கையானது, எரிபொருள் பதற்றத்தை உருவாக்குமென்பதுடன், சமாதான முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்கும் தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லையென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றது.  இவ்வாறான சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்தால் பாரிய பதற்றமான சூழ்நிலைக்கு வழிவகுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)