Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

In இந்தியா
Published: 05:17 GMT, Dec 4, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Puvanes
ramadass001

ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட குமரிமாவட்டத்தை பார்வையிட்டு, சேதவிபரங்களைக் கேட்டிறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஓஹி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர், பலர் வீடுகளை இழந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

எனினும் இதுவரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றினை விரைந்து சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 கோடிகளை நிவாரணமாக ஒதுக்கியுள்ளது எனச்சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தொகை போதாது அதிகரிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் தொகையை நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் அத்தோடு காணாமல் போன மீனவர்கள் தொடர்பாகவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg